ஜம்பு பதே நமஸ்தே ஸ்ரீ
கஜாரண்ய க்ஷேத்ர பதே நமஸ்தே
அம்புஜாக்ஷி அகிலாண்டேஸ்வரி
மனோஹர ஸ்ரீ உமா பதே
சாரமாமுனி சிர ஸ்புரித்த ஜம்பு வ்ருக்ஷ சாயா
பீட விஹார ஸ்ரீ ஜம்பு லிங்கம்
பராசக்தி கல்யாணி உத்தம காவேரி
தீர சமீபஸ்ய ப்ரதிஷ்டித அப்பு லிங்கம்
பானு கோடி அதி பிரகாசம்
பக்த ஜனாஸ்ரயம்ச்ச வரதம்
பாப தாப சோக விநாசனம்
புக்தி முக்தி சித்தி விதாயகம்
ராகம் - கல்யாணி, தாளம் - மிஸ்ர சாபு
விளக்கம்
ஜம்புபதே - ஜம்புகேஸ்வரம் என அழைக்கப்படும் திருவானைக்கா என்ற இடத்திற்கு அதிபதியான உன்னை, நமஸ்தே - வணங்குகிறேன்
ஜம்பு என்றால், நாவல் பழம். இந்த ஸ்தலத்தின் மரம், வெண் நாவல் மரம். அதனால், ஜம்புகேஸ்வரம் என்ற பெயர். திருக்கோவில் இறைவன் - ஜம்புநாதன்.
ஸ்ரீ கஜாரண்ய க்ஷேத்ர பதே நமஸ்தே - திருவனைக்காவிற்கு இன்னொரு பெயர் கஜாரண்யம். அந்த இடத்திற்கு அதிபதியே உனக்கு நமஸ்காரம்.
கஜாரண்யம் என்றால், யானைகள் நிறைந்த காடு. ஸ்தல புராணம் எனது மற்றொரு வலைத்தளத்தில் எழுதியுள்ளேன். அதை படிக்க இங்கே அழுத்தவும்.
அம்புஜாக்ஷி - தாமரை இதழ் போன்ற கண்களை உடையவள்.
அகிலாண்டேஸ்வரி - இந்த அகிலத்திற்கும் (உலகிற்கும்), அண்டத்திற்கும் தலைவி. இந்த ஸ்தலத்தின் இறைவி.
மனோஹர - அன்னையின் மனதிற்கு இனியவர்.
ஸ்ரீ உமாபதே - உமையின் பதி
சாரமாமுனி சிர ஸ்புரித்த ஜம்பு வ்ருக்ஷ சாயா பீட விஹார ஸ்ரீ ஜம்பு லிங்கம் -
சாரமா என்ற முனி, தவம் இருந்தார். அவர் தலையிலிருந்து வெளி கிளம்பிய வென் நாவல் மரத்தின் அடியில், அமர்ந்த ஜம்பு லிங்கம்.
பராசக்தி கல்யாணி உத்தம காவேரி தீர சமீபஸ்ய ப்ரதிஷ்டித அப்பு லிங்கம் -
பராசக்தி அகிலாண்டேஸ்வரி (கல்யாணி என்பது அன்னையின் மற்றொரு பெயர். இங்கு ராக முத்திரையாக பயன்படுத்தியுள்ளேன்.), உயர்ந்த காவேரி நதியின் அருகில், நீரினால் லிங்கத்தினை உருவாக்கி, பூஜித்தாள். அதுவே இந்த ஸ்தலம் அப்பு ஸ்தலம் ஆனது. லிங்கம், அப்பு லிங்கம். அப்பு - தண்ணீர்.
பஞ்ச பூத ஸ்தலங்கள் - ஆகாசம் - சிதம்பரம், காற்று - காலஹஸ்தி, நெருப்பு - திருவண்ணாமலை, நீர் - திருவானைக்கா, மண் - காஞ்சிபுரம்.
பானு கோடி அதி பிரகாசம் - கோடி சூரியன் சேர்ந்தாற்போல் மிகுந்த தேஜஸ்.
பக்த ஜனாஸ்ரயம்ச்ச வரதம் - பக்த ஜனங்கள் கேட்கும் வரங்கள் அளிப்பவர்
பாப தாப சோக விநாசனம் - பாவங்கள், நிறைவேறாத ஆசைகள் (தாபங்கள்), துக்கம் (சோகம்) ஆகியவற்றை அழிப்பவர்.
புக்தி முக்தி சித்தி விதாயகம் - நல்ல புத்தி, வீடுபேறு, அஷ்டமஹா சித்திகள் ஆகியவற்றை அருள்பவர்.
பாடலை கேட்க கீழே அழுத்தவும்
Check this out on Chirbit