Saturday 12 December 2009

சரஸ்வதி

சகல கலா வல்லியே நின் தாள் சரணடைந்தேன் நானே

அகிலம் முழுதும் போற்றும் அருள் நிறை செல்வியே
அனுதினம் உன்னை பாடி அமருலகடைவேன்

மங்களம் நல்கிடும் மாதர் குலத்தரசி
திங்கள் அணி சடையோன் தங்கையும் நீ
தனி நயம் தவழும் நின் தண் அருளினை தந்து
தயை புரிந்து எம்மை தினமும் நீ காப்பாய்

பாடலை கேட்க கீழே அழுத்தவும்

Check this out on Chirbit

Thursday 15 October 2009

சிவன்

காண வேண்டுமே பொன் அம்பலத்தையனின்
ஆனந்த நடனம்

வானவரும் போற்றும் ஞான சபை தன்னில்
கானமுழங்க சித்தானந்த நடனம்

மானிடரும் மகிழ் ரத்ன சபை தன்னில்
மத்தளம் கொட்ட சதானந்த நடனம்

கலைநயம் தழுவும் சித்ர சபை தன்னில்
கணமும் ஓயாமலே கவின்மிகு நடனம்

தாரணி போற்றும் தாமிர சபை தன்னில்
தீனரை காக்கும் பேரானந்த நடனம்


இந்த பாடல் பாபநாசம் சிவனின் காண வேண்டாமோ என்ற ஸ்ரீ ரஞ்சனி ராக பாடலின் சந்தத்தில் எழுதப்பட்டது. ஒரு சரணம் முடிந்ததும் பல்லவியை மீண்டும் பாட அல்லது சொல்ல வேண்டும்.

Thursday 1 October 2009

மகா சிற்பங்கள்

இந்த கவிதை சிவகாமியின் சபதம் நூல் படித்த பின் எழுதப்பட்டது. கல்கி அவர்களின் எழுத்து மாமல்லபுரத்தின் சிற்ப அழகினை நம் கண் முன் நிறுத்தியது. நவீன யுக எழுத்தாளர்களின் தலைவராக திரு கல்கி அவர்களை நான் கருதுகிறேன். அந்த தலைவனுக்கு இந்த கவிதை அர்ப்பணம்.

அலைகடல் மோதும் கடற்கரை பகுதி
மலையும் கடலும் அடர்ந்த தொகுதி
வலைப்பிடித்து மீன் பிடிக்கும் மீனவர் மத்தியில்
உளி பதித்து ஒலி கிளப்பும் சிற்பிகள் தோன்றினர்

வெறுமைக்கொண்ட பாறையை கண்டான்
விண்ணவர் போற்றும் விந்தை புரிந்தான்
ஏறுக்கொடியோனின் ஏற்றமிகு கனவினால்
கற்குவியலும் மாறியதே கற்கோவிலாய்

மாறுபடும் கருத்தில்லை மாமல்லபுரம் மகத்தானது என்பதற்கு
வேறுபடும் விதங்களில் வேலைப்பாட்டு ஜாலங்கள்
காலம் மாறும் கோலும் கைமாறும்
மாறா வனப்புடன் மகிமை பெருகி

மண்ணுயிர் உள்ளவரை ஏன் மண்ணுயிர் அழிந்த பிறகும்
மகோன்னதம் பெற்று விளங்கும்
மகேந்திரனிடமிருந்து மாமல்லன் வழியாக இந்த
மேதினிக்கு கிடைத்த மகா சிற்பங்கள்


Wednesday 30 September 2009

சிந்தனை செய் பெண்ணே


இந்த கவிதை கொடுமைகளை சந்திக்கும் பெண்களுக்கு சமர்பிக்கிறேன். நான் சிறு வயதில் இருந்தபோது என் வீட்டிற்கு அருகில் நடந்த ஒரு சம்பவம் என்னை இவ்வாறு எழுத தூண்டியது.

வெங்கடசலபதி

வெங்கட சுவாமியே சரணம் - அவர்
சங்கடம் நீக்கி சக்தி கொடுப்பார்

திருப்பதி மலையில் இருப்பவராம்
திருவை துணையாய் கொண்டவராம்
தரிசிக்க வருவோர் அனைவருக்கும்
தாமதம் இன்றி அருளைக்கொடுப்பார்

வேங்கட சுவாமியை அனைவரும் தொழுதால்
சங்கடம் நீங்கும் சக்தி உண்டாகும்
எட்டுத்திக்கிலும் இருந்து வாருங்கள்
ஏழுமலை சுவாமியை தரிசனம் செய்யவே

Tuesday 29 September 2009

சரஸ்வதி - 2

சங்கீத ரூபிணி சரஸ்வதி நீயே கதி
சங்கரன் ப்ரும்மா ஹரி தொழுதிடும் ஜெகதீஸ்வரி

ச்ருங்க நகர நிவாஸினி சாரதே கருணாநிதே
சிங்கார ரூபிணி சகல ஜீவ ஸுபூஜிதே

ஸ்வேத பத்மாஸனஸ்திதே ஸ்வேத புஷ்ப ஸுபூஜிதே
கீத வாத்ய வினோதினி சீத கிரண கரத்ருதே

சரஸ்வதி -1

வீணாபாணி நீயே புஸ்தகவேணி நீயே
தமிழ்வாணியும் நீயே கலைவாணியும் நீயே

சகல கலைகளுக்கும் தாயும் நீயே
சகல சௌபாக்யங்களையும் தருபவள் நீயே

வெள்ளை கமலத்தில் அமர்ந்தவள் நீயே
கொள்ளை கனி இசையை கொண்டவள் நீயே
எல்லோர்க்கும் உயர்ந்தவளாய் இருப்பவள் நீயே
எங்கிருந்தாலும் அருள்வாய் தாயே

Friday 25 September 2009

முருகன்

ஆறுமுக வேலவனே ஏறுமயில் வாகனனே
ஆறுபடை வீடு கொண்ட பெருமானே
அம்மையிடம் வேல் பெற்று அப்பனிடம் அருள் பெற்று
அசுரர்களை அழித்த வெற்றி வீரனே

அசுரர்களை அழித்ததும் தேவசேனாவினை
திருமணம் செய்து கொண்ட வேலவா
மங்கை குற வள்ளியின் அழகைக்கண்டு மயங்கி
மணம் புரிந்து கொண்ட அழகேசா

பாடலை கேட்க கீழே அழுத்தவும்

Check this out on Chirbit

துறவு

சிறப்பான சிந்தனைத்துளிகளை அள்ளிக்கொடுத்த அவதானி என்ற கவிஞருக்கு எனது மனமார்ந்த நன்றி

எல்லாவற்றையும் பற்றற்று துறந்தவன் துறவி என்கிறார்கள்
ஆனால் எல்லாம் எனப்படுகிற கடவுளின் மேல்
பற்று வைத்திருக்கிறார்கள் துறவிகள் ?
அப்படியானால் அவர்கள் துறவியா?
ஒரு நாத்திகன் தான் துறவியாக முடியுமா என்ன ?

- அவதானி

விநாயகர் துதி

ஞான விநாயகனே எமக்கு
நல்லருள் தருவாய் கணநாதனே

பாரோர் புகழும் பரமனின் மைந்தனே
பக்தர்க்கு அருளும் பரம்பொருளே

மோதக ப்ரியனே மூல முதல்வனே
முக்தி தருபவனே சித்தி விநாயகனே
ஏதெனக்கு உலகில் உன்னை விட்டால் வேறு தெய்வம்
மேதினி மேன்மையுற அருள் புரிவாயே