Sunday, 10 October 2010

ஸ்ரீரங்கநாதர்

ஸ்ரீ ரங்க புர வாசனே ரங்கனே பிருந்தாவன சாரங்கனே

காவேரி தீரமும் கனவேத கோஷமும்
கனி இனைய பாசுரமும் புடைசூழும் வரதனே

பன்னக சயனனே பரம தயாளனே
பங்கஜ நேத்ரனே பத்மநாபனே
விண்ணவர் போற்றும் வாசுதேவனே
வினைகளை களைவாய் வேங்கடேசனே
எண்ணுதர்க்கினிய பாண்டு ரங்கனே
ஏற்றங்கள் தருவாய் ஏழுமலையனே
முன்னவனே முதல் முடிவிலா முகுந்தனே
மனமுவந்தருள்வாய் மலரடி சரணம்

Thursday, 7 October 2010

ராமர்

ராகம்: ராமப்ரியா
தாளம்; ரூபகம்

பல்லவி
ராமம் லோகாபி ராமம் - ப்ரிய சீதா மனோஹரம் - சுந்தர (ராமம்)

அனுபல்லவி
ஷ்யாமம் தசரத புத்ரம் கருணா சமுத்ரம் ஸ்ரீ (ராமம்)

சரணம்
சுர சேவித சுககரம் அரவிந்த லோச்சனம்
வரதாபய கரம் சரணாகத ஜன ரக்ஷகம் (ராமம்)

பொருள்:
ராமன், லோகத்தில் இருக்கும் ஜீவன் அனைத்திற்கும் இதமானவன். லோகாபிராம - லோக + அபிராம என்று பொருள் கொள்ளவும். அபிராம என்றல் அழகு, இதம் என்று பொருள்.
ப்ரியமான சீதையின் மனத்தைக் கவருபவர். நமது மனத்தையும் தான். :)
ராம(ம்) - ப்ரிய சீதா  இடத்தில, ராக முத்திரை வந்தமர்ந்தது!
அழகன் அவன் - சுந்தரன்.

ஷ்யாமம் - நீல நிறமானவர்.
தசரத புத்ரம் - தசரதனின் மைந்தன்.
கருணா சமுத்ரம் - கருணைக்கடல்.

சுர சேவித சுககரம் - தேவர்கள் வணங்கும் இறைவன். சுகத்தை தன் கரத்தில் வைத்துக்கொண்டு எல்லோருக்கும் அருள்பவன்.
அரவிந்த லோச்சனம் - தாமரை போன்ற மலர்ந்த கண்கள் உடையவன்.
வரதாபய கரம் - வரத, அபய ஹஸ்தங்கள் கொண்டவன்.
சரணாகத ஜனரக்ஷகம் - தன்னிடம் சரணடைந்த மானிடர்களை காப்பவன்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

மீனாக்ஷி

மீனாக்ஷி கருணா கடாக்ஷி
சகல லோக சாக்ஷி தேவி

வனஜாக்ஷி வாமதேவ மனோஹரி
வந்தனம் சரணம் ரக்ஷிம்சு தேவி

மலையத்வஜ பாண்ட்யராஜ குமாரி
மதங்க முனி புத்ரி மாதங்கி
ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி சுககரி
ஹ்ரீம்கார பீஜ மந்த்ரேச்வரி

அர்த்தம்:

தேவி மீனாக்ஷி, கருணை ததும்பும் கண்கள் உடையவளே, அனைத்து உலகிற்கும் (அதல, விதல முதல் பாதாள  - பூமி முதல் சத்ய லோகம்) நீயே சாட்சி.

 நீல நிற தாமரை (வனஜா) போன்ற கண்கள் உடையவளே, வாமதேவனின்  (சிவன்)  மனத்திற்கு இனியவளே, உன்னை வணங்கி சரணடைகிறேன், என்னை காப்பாட்ட்றுவாய். [வாம - அழகு]

மீனாக்ஷி பற்றிய பிற குறிப்புகள்:

1. மலையத்வஜ பாண்டியனின் புதல்வி.
2. முற்பிறவியில், மதங்க முனியின் புதல்வி மாதங்கி.
3. ராஜராஜேஸ்வரி - அரசர்களுக்கெல்லாம் அரசி.
4. சுககரி - கையில் கிளியினை வைத்திருப்பவள் (சுக - கிளி).
5. ஸ்ரீ வித்யா உபாசனையில் முக்கியமானது ஹ்ரீம்கார பீஜாக்ஷரம். அந்த பீஜ மந்த்ரத்தின் நாயகி.

பாடலை கேட்க:


Check this out on Chirbit

Tuesday, 6 July 2010

ஜம்புகேஸ்வரர்

ஜம்பு பதே நமஸ்தே ஸ்ரீ
கஜாரண்ய க்ஷேத்ர பதே நமஸ்தே

அம்புஜாக்ஷி அகிலாண்டேஸ்வரி
மனோஹர ஸ்ரீ உமா பதே

சாரமாமுனி சிர ஸ்புரித்த ஜம்பு வ்ருக்ஷ சாயா
பீட விஹார ஸ்ரீ ஜம்பு லிங்கம்
பராசக்தி கல்யாணி உத்தம காவேரி
தீர சமீபஸ்ய ப்ரதிஷ்டித அப்பு லிங்கம்

பானு கோடி அதி பிரகாசம்
பக்த ஜனாஸ்ரயம்ச்ச வரதம்
பாப தாப சோக விநாசனம்
புக்தி முக்தி சித்தி விதாயகம்

ராகம் - கல்யாணி, தாளம் - மிஸ்ர சாபு

விளக்கம் 
ஜம்புபதே - ஜம்புகேஸ்வரம் என அழைக்கப்படும் திருவானைக்கா என்ற இடத்திற்கு அதிபதியான உன்னை,  நமஸ்தே - வணங்குகிறேன்
ஜம்பு என்றால், நாவல் பழம். இந்த ஸ்தலத்தின் மரம், வெண் நாவல் மரம். அதனால், ஜம்புகேஸ்வரம் என்ற பெயர். திருக்கோவில் இறைவன் - ஜம்புநாதன்.
ஸ்ரீ கஜாரண்ய க்ஷேத்ர பதே நமஸ்தே - திருவனைக்காவிற்கு இன்னொரு பெயர் கஜாரண்யம். அந்த இடத்திற்கு அதிபதியே உனக்கு நமஸ்காரம்.
கஜாரண்யம் என்றால், யானைகள் நிறைந்த காடு. ஸ்தல புராணம் எனது மற்றொரு வலைத்தளத்தில் எழுதியுள்ளேன். அதை படிக்க இங்கே அழுத்தவும்.

அம்புஜாக்ஷி - தாமரை இதழ் போன்ற கண்களை உடையவள்.
அகிலாண்டேஸ்வரி - இந்த அகிலத்திற்கும் (உலகிற்கும்), அண்டத்திற்கும்  தலைவி. இந்த ஸ்தலத்தின் இறைவி.
மனோஹர - அன்னையின் மனதிற்கு இனியவர்.
ஸ்ரீ உமாபதே - உமையின் பதி

சாரமாமுனி சிர ஸ்புரித்த ஜம்பு வ்ருக்ஷ சாயா பீட விஹார ஸ்ரீ ஜம்பு லிங்கம் -
சாரமா என்ற முனி, தவம் இருந்தார். அவர் தலையிலிருந்து வெளி கிளம்பிய வென் நாவல் மரத்தின் அடியில், அமர்ந்த ஜம்பு லிங்கம்.

பராசக்தி கல்யாணி உத்தம காவேரி தீர சமீபஸ்ய ப்ரதிஷ்டித அப்பு லிங்கம் -
பராசக்தி அகிலாண்டேஸ்வரி (கல்யாணி என்பது அன்னையின் மற்றொரு பெயர். இங்கு ராக முத்திரையாக பயன்படுத்தியுள்ளேன்.), உயர்ந்த காவேரி நதியின் அருகில், நீரினால் லிங்கத்தினை உருவாக்கி, பூஜித்தாள். அதுவே இந்த ஸ்தலம் அப்பு ஸ்தலம் ஆனது. லிங்கம், அப்பு லிங்கம். அப்பு - தண்ணீர்.
பஞ்ச பூத ஸ்தலங்கள் - ஆகாசம் - சிதம்பரம், காற்று - காலஹஸ்தி, நெருப்பு - திருவண்ணாமலை, நீர் - திருவானைக்கா, மண் - காஞ்சிபுரம்.

பானு கோடி அதி பிரகாசம் - கோடி சூரியன் சேர்ந்தாற்போல் மிகுந்த தேஜஸ்.
பக்த ஜனாஸ்ரயம்ச்ச வரதம் - பக்த ஜனங்கள் கேட்கும் வரங்கள் அளிப்பவர்
பாப தாப சோக விநாசனம் - பாவங்கள், நிறைவேறாத ஆசைகள் (தாபங்கள்), துக்கம் (சோகம்) ஆகியவற்றை அழிப்பவர்.
புக்தி முக்தி சித்தி விதாயகம் - நல்ல புத்தி, வீடுபேறு, அஷ்டமஹா சித்திகள் ஆகியவற்றை அருள்பவர்.

பாடலை கேட்க கீழே அழுத்தவும்

Check this out on Chirbit

Friday, 25 June 2010

தாயுமானவர்

ராகம்: ஆரபி
தாளம்: ஆதி

பல்லவி
த்ரிசிரகிரி வாசம் ஈஸ்வரம் த்ரைலோக்ய நாதம்
ஸாமகான ப்ரிய சங்கரம் சதாசிவம் மங்களகரம்

அனுபல்லவி
த்ரிநயன வதன சுந்தர ஸ்வரூபம்
ஹரி விரிஞ்சாதி வந்தித பரம்
சுரகுரும் பசுபதிம் ஜகத் காரணம்
ம்ருகதரம் பன்னக பூஷணம் வந்தே

சரணம்
பவ ரோக ஹரம் ம்ருத்யுஞ்ஜயம்
ஸனகாத்யஷ்ட மகாமுனி பூஜிதம்
ஸதிபதிம் ந்ருத்ய கலாதிபதிம் க்ரஹ
தோஷ நிவாரணம் சந்தோஷ காரணம்
ஸஹஸ்ர சங்க பலசாரபிஷேக
ப்ரியகரம் நித்ய சுப பல தாயகம்

மத்யம கால சாஹித்யம்
வனித மஹாமணி புவன வசங்கரி
சுகந்த குந்தளாம்பிகா ஸமேதம்
வணிக குல ஸ்திரீ ரத்ன சுககரம்
ஸ்ருதஜன பூஜித மாத்ரு பூதேசம்

விளக்கம் 
த்ரிசிரகிரி வாசம் - த்ரிஷிரன் என்ற அசுரன் அமைத்த மலை, திரிசிர கிரி - திருச்சிராப்பள்ளி. அந்த மலையில் வசிப்பவர்.

ஈஸ்வரம் - ஈசன்.

த்ரைலோக நாதம் - அவர் மூவுலகுக்கும் (பூமி, பூமிக்கு மேல் உள்ள லோகங்கள் (சுவர்க்கம்) , பூமிக்கு கீழ் உள்ள லோகங்கள் (நரகம் - பாதளம்) - என மூன்று லோகங்களுக்கு தலைவன்.

ஸாமகான பிரிய  - ஸாம வேதத்தில் (கானத்தில்) அதிக விருப்பம் உள்ளவர்

சங்கரம் - நல்லதை நடத்தும் கரம் கொண்டவர்.

சதாசிவம்  - சதா சிவன் ( பஞ்ச க்ருத்யம் எனப்படும், படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் இவற்றில், அருளல் என்னும் செயல் செய்பவர்). அருள் வழங்குபவர் என்று பொருள் கொள்ளவேண்டும்.

மங்களகரம்  - சுபம் - நல்லனவற்றை அருள்பவர்

த்ரிநயன வதன சுந்தர ஸ்வரூபம் - மூன்று கண்கள் உடைய அழகிய வடிவம்

ஹரி விரிஞ்சாதி வந்தித பரம் - ஹரி - விஷ்ணு, விரிஞ்சி - பிரம்மா, முதலியவர்கள் வழிபடும் பரம் பொருள்.

சுரகுரும்  - தேவர்களின் குரு (ப்ரஹஸ்பதி)

பசுபதிம் - உலக உயிர்களுக்கு அதிபதி

ஜகத் காரணம் - உலகம் தோன்ற காரணமானவர் (இந்த இடத்தில், சிவன், எல்லா  ஜீவ ராசிகளுக்கும்  தந்தை என எடுத்துக்கொள்ளவும்).

ம்ருகதரம்  - ம்ருக - மான். மானினை கையில் கொண்டவர்.

பன்னக பூஷணம்  -  நாகத்தினை நகையாக அணிந்தவர்.

வந்தே - உன்னை வணங்குகிறேன்.

பவ ரோக ஹரம்   - பவ ரோக ஹரன் - சம்சார துன்பத்தை அழிப்பவன். (ப்ரனதார்திஹரன் - ப்ராண - ஆர்த்தி - ஹரன் - பிறவி துன்பத்தை அறுப்பவன்)

ம்ருத்யுஞ்ஜயம் - ம்ருத்யு - மரணம் - மரணத்தை வெற்றிகொள்ள செய்பவன். (கால சம்ஹார முர்த்தி - மார்கண்டேயனுக்காக யமனை உதைத்தார் அல்லவா?)

ஸனகாத்யஷ்ட மகாமுனி பூஜிதம் - ஸனகர் முதலிய 8 முனிகள் வணங்குகிறார்கள். பொதுவாக ஸனகர் , சனந்தனர் , சனாதனர் , சனத் குமாரர்  என்ற 4 பிரம்மாவின் மானச புத்திரர்கள், தக்ஷினாமுர்த்தியை வணங்குவார்கள். திருச்சி மலைக்கோவிலில், இவர்கள் நால்வரைத் தவிர, பதஞ்சலி, வியாக்ரபாதர் , திருமூலர், சிவயோக முனி  என இன்னும் நால்வர் தொழுவார்கள். தக்ஷினமுர்த்தி சந்நிதியில் பார்த்தால் தெரியும். அதனால் இவ்விடத்தில் அஷ்ட முனி என்று எழுதி உள்ளேன்.

ஸதிபதிம் - ஸதி ஆகிய பார்வதியின்  கணவர்.

ந்ருத்ய கலாதிபதிம்  - நாட்டிய கலையின் அதிபதி

க்ரஹதோஷ நிவாரணம் - நவக்ரஹங்களினால் ஏற்படும் தோஷங்கள் அனைத்தையும் போக்கி ஆறுதல் தருபவர். (தாயுமானவர் கோவிலில், நவக்ரஹ சந்நிதியில் ஒரு புதுமை பார்க்கலாம். சூரியன் நடுவில் நிற்க, அவரை பார்த்தே மற்ற க்ரஹங்களும் நிற்பார்கள் . அதனால் இங்கு வழிபடுபவர்களுக்கு க்ரஹங்களின் வக்கிர  பார்வை இல்லாமல், நற்பார்வை  மட்டுமே கிட்டும்).

சந்தோஷ காரணம் - பக்தர்களின் மன மகிழ்ச்சிக்கு காரணமானவர்.

ஸஹஸ்ர சங்க பலசாரபிஷேக ப்ரியகரம்  - 1000 சங்கு, பழங்கள், அவற்றின் சாறு ஆகியவற்றால் அபிஷேகம் செய்தல் , அவருக்கு விருப்பமான ஒன்று. அதனால், அகமகிழ்ந்து அருள்வார். 1008 சங்காபிஷேகம், ஜேஷ்டாபிஷேகம்  (கேட்டை நக்ஷத்ரத்தின் அன்று, பழ சாறுகளால் தாயுமானவருக்கு அபிஷேகம் செய்வார்கள்).  இவ்வரியில், ஆரபி ராக முத்திரையை பலசாரபிஷேக  என்னும் இடத்தில அமைந்துள்ளது.

நித்ய சுப பல தாயகம் - என்றும் மங்களத்தை அருள்பவர்.

வனித மஹாமணி - பெண்களில், மிக உயர்ந்தவள்  ( மாணிக்கம் போன்றவள் )

புவன வசங்கரி - உலகை தன்வசப்படுத்தியவள்

சுகந்த குந்தளாம்பிகா ஸமேதம் - சுகந்த குந்தளாம்பிகை  என்னும் மட்டுவார்குழலி  (மணம் மிகுந்த கூந்தல் உடையவள்) யை மனம் புரிந்தவர்.

வணிக குல ஸ்திரீ ரத்ன சுககரம் -  ரத்னாவதி, ஒரு வணிகக்குலத்தை சேர்ந்த பெண். சிவா பக்தி மிக்கவள். நிறை மாத கர்பிணியாக இருந்த அவளிற்கு, துணை ஒருவரும் இல்லாமல் போக,  தாயக வந்து பிரசவம் பார்த்தவர். சுகமாக பிள்ளையும் பிறந்தது.

ஸ்ருதஜன பூஜித மாத்ரு பூதேசம் - மனிதர்கள் மாத்ருபுதேஸ்வரராக (தாயுமானவர்) இவரை வணங்குகின்றனர்.

பாடலை கேட்க கீழே அழுத்தவும்:

Check this out on Chirbit

Monday, 1 March 2010

கவிதை

கவின்மிகு கன்னித்தமிழில்
கவிஞர் கூறும் மொழிகள்
காலத்திற்கேற்ற நெறிகள்
கனிவோடதனை கூறுவது கவிதை
கற்பனை ஊற்று பெருக
கற்பவர் உள்ளம் உருக
கனியின் இனிமை மலரின் மென்மை
ஒருங்கே உடையது கவிதை