Friday, 8 October 2010

ராமர்

ராகம்: ராமப்ரியா
தாளம்; ரூபகம்

பல்லவி
ராமம் லோகாபி ராமம் - ப்ரிய சீதா மனோஹரம் - சுந்தர (ராமம்)

அனுபல்லவி
ஷ்யாமம் தசரத புத்ரம் கருணா சமுத்ரம் ஸ்ரீ (ராமம்)

சரணம்
சுர சேவித சுககரம் அரவிந்த லோச்சனம்
வரதாபய கரம் சரணாகத ஜன ரக்ஷகம் (ராமம்)

பொருள்:
ராமன், லோகத்தில் இருக்கும் ஜீவன் அனைத்திற்கும் இதமானவன். லோகாபிராம - லோக + அபிராம என்று பொருள் கொள்ளவும். அபிராம என்றல் அழகு, இதம் என்று பொருள்.
ப்ரியமான சீதையின் மனத்தைக் கவருபவர். நமது மனத்தையும் தான். :)
ராம(ம்) - ப்ரிய சீதா  இடத்தில, ராக முத்திரை வந்தமர்ந்தது!
அழகன் அவன் - சுந்தரன்.

ஷ்யாமம் - நீல நிறமானவர்.
தசரத புத்ரம் - தசரதனின் மைந்தன்.
கருணா சமுத்ரம் - கருணைக்கடல்.

சுர சேவித சுககரம் - தேவர்கள் வணங்கும் இறைவன். சுகத்தை தன் கரத்தில் வைத்துக்கொண்டு எல்லோருக்கும் அருள்பவன்.
அரவிந்த லோச்சனம் - தாமரை போன்ற மலர்ந்த கண்கள் உடையவன்.
வரதாபய கரம் - வரத, அபய ஹஸ்தங்கள் கொண்டவன்.
சரணாகத ஜனரக்ஷகம் - தன்னிடம் சரணடைந்த மானிடர்களை காப்பவன்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

2 comments:

  1. லோகாபி ராமம் ஶ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யம்.ராம நாமமு ஜன்ம ரக்ஷக மந்த்ரம்.... ராமனின் மீது ப்ரீதியாக இயற்றப்பெற்ற ராமப்ரியா ஶ்ரீ ராம நவமி அன்று மிக பொருத்தமாக சுனாதம்.keep rocking.it's a musical feast.

    ReplyDelete
  2. லோகாபி ராமம் ஶ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யம்.ராம நாமமு ஜன்ம ரக்ஷக மந்த்ரம்.... ராமனின் மீது ப்ரீதியாக இயற்றப்பெற்ற ராமப்ரியா ஶ்ரீ ராம நவமி அன்று மிக பொருத்தமாக சுனாதம்.keep rocking.it's a musical feast.

    ReplyDelete