Monday, 11 October 2010

ஸ்ரீரங்கநாதர்

ஸ்ரீ ரங்க புர வாசனே ரங்கனே பிருந்தாவன சாரங்கனே

காவேரி தீரமும் கனவேத கோஷமும்
கனி இனைய பாசுரமும் புடைசூழும் வரதனே

பன்னக சயனனே பரம தயாளனே
பங்கஜ நேத்ரனே பத்மநாபனே
விண்ணவர் போற்றும் வாசுதேவனே
வினைகளை களைவாய் வேங்கடேசனே
எண்ணுதர்க்கினிய பாண்டு ரங்கனே
ஏற்றங்கள் தருவாய் ஏழுமலையனே
முன்னவனே முதல் முடிவிலா முகுந்தனே
மனமுவந்தருள்வாய் மலரடி சரணம்

4 comments:

  1. எனது மூவி ராகாஸ் என்னும் கர்னாடக சங்கீதத்தின் அடிப்படையில் அமைந்துள்ள வலைப்பதிவில் ஒருவரது கருத்துக்களைப்
    படித்து அம்புஜம் க்ருஷ்ணா அவர்களது பாடல்கள் சி.டியாக எங்கு கிடைக்கும் என்று தேடப்போய் உங்களது வலைக்கு
    வந்து சேர்ந்தேன்.

    உங்களது ஸ்ரீரங்க ப்ர வாசனே என்ற பாடல் படித்தேன். உடனே அதைப்பாடவேன்டும் என்று தோன்றியது. நான் ஒரு
    பாடகன் அல்ல. ஏதோ கர்னாடக சங்கீத இலக்கணம் கொஞ்சம் கொஞ்சம் தெரியும். அவ்வளவு தான். வலையில் அவ்வப்போது
    வரும் பாடல்களுக்கு எனக்குத் தெரிந்த வகையில் மெட்டு போட்டு பாடிவருகிறேன். எனது வலைப்பதிவுகளுக்கு வந்தால்,
    இது பற்றி மேலும் அறிய லாம்.

    உங்களது பாடலை பாடி, யூ ட்யுபில் போட்டிருக்கிறேன். உங்கள் அனுமதி கிடைக்குமென்று எதிர்பார்க்கிறேன். இதில்
    வணிக நோக்கு எதுவும் இல்லை.

    சுப்பு ரத்தினம்.
    http://movieraghas.com
    http://pureaanmeekam.blogspot.com
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  2. visit our blog here to listen to your song
    subbu rathinam
    http://menakasury.blogspot.com

    ReplyDelete
  3. பாடல் நன்றாக உள்ளது, வாழ்த்துக்கள்!
    ரங்கபுரவாசனைப் பாடும் பதிவொன்றை இங்கே பார்க்கவும்:
    http://jeevagv.blogspot.com/2009/12/blog-post.html

    ReplyDelete