Monday 10 April 2017

சிவன் - கற்பகநாதன் (கபாலீஸ்வரர்)

ராகம் - ஆபோகி 
தாளம் - ஆதி 

பல்லவி 
கற்பக நாதன் கண்பார்த் தருள்வார்
கற்பித மாயச் சூழினை அறுப்பார்

அனுபல்லவி
பொற்பதம் காட்டியே பொற்சபை யதனில்
அற்புத ஆனந்த நடனம் ஆடிடும் (கற்பக)

சரணம்
சிற்பர குருவாய் சனகாதி முனிவர்க்கு
முற்றது உணரும் ஞானநிலைத் தந்தார்
பற்றது நீங்கவே பாடிநிதம் துதிப்போம்
வெற்றி விடைமேல் வலம்வரும் கபாலி
(கற்பக)

*முற்றது - முதலும் முடிவுமான சத்தியம்.

பாடலைக் கேட்க:

Check this out on Chirbit

4 comments:

  1. அருமை ஆபோகி ஆனந்த சிற்சபை நடனம் கண்முன்னே விரித்திட்டாய்..சரண்...தொடரட்டும்....வளரட்டும்...வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. அருமை ஆபோகியில் சிற்சபை நாட்டியம் கண்முன்னே விரித்திட்டாய் ஆனந்தமாக.வாழ்க வளமுடன்..

    ReplyDelete
  3. அருமை ஆபோகியில் சிற்சபை நாட்டியம் கண்முன்னே விரித்திட்டாய் ஆனந்தமாக.வாழ்க வளமுடன்..

    ReplyDelete